×

அரியப்புரம் ஊராட்சியில் வாறுகால் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவு நீர் தேக்கம்

பாவூர்சத்திரம், அக்.31:  கீழப்பாவூர் ஒன்றியம், அரியப்புரம் ஊராட்சியில் வாறுகால் வசதியில்லாததால் மழையின் காரணமாக சாலையில் கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கீழப்பாவூர் ஒன்றியம், அரியப்புரம் ஊராட்சிக்குட்பட்ட அரியப்புரம், வெள்ளைப்பனையேறிபட்டி பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரியப்புரம் மேலத்தெரு, அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மற்றும் நயினார் கோயிலுக்கு செல்லும் சாலை, வெள்ளைப்பனையேறிப்பட்டி தெற்கு குறுக்குத் தெருவில் உள்ள சாலையில் வாறுகால் வசதி செய்து தரப்படவில்லை.
 இது குறித்து பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை. மேலும் தற்போது வட கிழக்கு பருவ மழையின் காரணமாக சாலையில் கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து குட்டை போல் காட்சியளிக்கிறது.  இதனால் பொதுமக்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், மாணவ, மாணவிகள் கழிவு நீர் வழியே செல்வதால் டெங்கு மற்றும் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையின் இருபுறமும் கழிவு நீர் ஒடை அமைத்து தெருக்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drainage facilities ,streets ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...