×

புதுக்கோட்டை அய்யனார் காலனியை சூழ்ந்த வெள்ளம் குடியிருப்புவாசிகள் அவதி

புதுக்கோட்டை, அக். 31: புதுக்கோட்டையில் பெய்த மழையால் தண்ணீர் பழைய பாலத்தை தொடும் அளவுக்கு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே அய்யனார் காலனியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து நின்றதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதே போல் தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டையில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் பழைய பாலத்தை உயரத்தை தொடும் அளவுக்கு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அதன் அருகே உள்ள யூகோ நகர், அய்யனார் காலனி, ராஜிவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி சீரமைக்கப்பட்டது.
இதனிடையே அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக புதுக்கோட்டை பழைய பாலம் சாலை மூடபட்டது. சத்யாநகர், சிலுக்கன்பட்டியில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை, பாலத்தை மூழ்கடித்து விடுமோ என்ற அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். இதனிடையே இதனிடையே அய்யனார் காலனியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து நின்றதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Flood Residents ,Aiyanar Colony ,Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...