×

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை மிரட்டியவருக்கு வலை

சாத்தான்குளம், அக். 31: சாத்தான்குளம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த  தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம்  அருகேயுள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் அசோகன்(53) தொழிலாளி. இவர்  நேற்றுமுன்தினம் சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாகுடி டாஸ்மாக் கடை  அருகே நின்றார். அப்போது அங்கு வந்த மேலநொச்சிகுளத்தைச் சேர்ந்த காசி மகன்  பாலசுப்பிரமணியன்(38) என்பவர் அசோகனிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார்.  அவர் கொடுக்க மறுத்ததால் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்த  புகாரின்பேரில்  சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் வழக்குபதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வருகிறார்.

Tags : sathankulam ,
× RELATED பாத்தி கட்டி சேனைக்கிழங்கு சாகுபடி...