பாடாலூரில் மழை 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது

பாடாலூர், அக். 31: பாடாலூர் அருகே மழையில் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையில் தேனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுந்தரம் என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து சேதமடைந்தது. அதேபோல் மங்களம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ரெங்கநாயகி என்பவரின் கூரை வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

Related Stories:

>