×

மருத்துவர்கள் நூதன போராட்டம் நோயாளிகள் கடும் அவதி

பெரம்பலூர், அக்.31:பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் 6வது நாளில் டாக்டர்கள் கண்களை கருப்புத் துணியால் மூடி கட்டிக்கொண்டு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு நூதன போராட்டம் நடத்தினர். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக் கேற்ப அரசு மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்குப் பணி யிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளி ட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்து வர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பி னர் கடந்த 5நாட்களாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனை, வேப்பூர், காரை, கிருஷ்ணாபுரம் ஆகிய வட்டார மருத்துவமனைகள் மற்றும் கிராமப்பு றங்களில் உள்ள 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணி புரியும் 130க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 6வது நாளான நேற்று (30 ம்தேதி) புதன் கிழமையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் அவதியடைந்தனர்.

வழக்கம் போல் நர்சுகளே காய்ச்சல் தலைவலிக்குத் தகுந்தபடி நோயாளிகளை விசாரித்து மாத்திரைகளைக் கொடுத்து சமாளி த்து வருகின்றனர். இருந்தும் காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதயம், எலும்பு முறிவு உள்ளிட்ட முக்கிய சிகிச் சை பிரிவுகளை சேர்ந்த மருத்து வர்கள் இல்லாத தால் முழுமையான சிகிச் சை பெற வந்த புறநோயா ளிகள் ஏமாற்றத்துடன் திரு ம்பிச்சென்றனர். மேலும் ஸ்கேன் இயந்திரங்கள் இயக்கப் படாததால் காத்தி ருந்து ஏமாந்து சென்றனர். அரசு மருத்துவர்களோ 5 நாட்களைக் கடந்தும், தங் கள் போராட்டம் அரசின் பார்வைக்குத் தெரியவில்லையா? எனக் கேள்வி யெழுப்பும் விதமாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட, பெரம்பலூரில் உள்ள அரசுத் தலைமை மருத் துவ மனையின் முன்பு வந் து தங்கள் கண்களில் கருப் புத் துணியைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுவிட்டுக் களைந்து செ ன்றனர்.
இதனால் புறநோயாளிகள், உள்நோயாளி கள் என நூற்றுக் கணக் கானோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை