×

லாரி உரிமையாளர் வீட்டில் 18 பவுன் நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ஜெயங்கொண்டம், அக். 31: ஜெயங்கொண்டம் அருகே பட்டப்பகலில் லாரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கம்தோண்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). லாரி உரிமையாளர். இவரது மகள் ரம்யா (26) என்பவர் கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ரம்யாவை ரவிச்சந்திரன் அழைத்து சென்றார். அங்கு சென்றபோது ரவிச்சந்திரனின் பெரிய மகள் பிரியாவின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களையும் மருத்துவரிடம் காண்பித்து வருவதற்காக சென்றனர். அப்போது குழந்தைக்கு மருத்துவம் பார்க்க நேரமாகும் என்பதால் மற்றவர்களை விட்டு விட்டு தான் மட்டும் பேருந்தில் ஏறி வீட்டுக்கு ரவிச்சந்திரன் சென்றார். பின்னர் வீட்டுக்கு சென்று சாவி போட்டு கதவை திறக்க முயன்றார். ஆனால் வீட்டு கதவை திறக்க முடியவில்லை. பின்னர் பார்த்தபோது உள்பக்கம் கதவு சாத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து வீட்டின் பின்புறத்துக்கு சென்று ரவிச்சந்திரன் பார்த்தார். அப்போது பின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சாவியால் திறந்து லாக்கரில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் சாமி ரூமில் வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் கோமதி, சத்யராஜ் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

Tags : home ,lorry owner ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு