×

புறவழிச்சாலை பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மெகா பள்ளங்கள் பஞ்சர் ஒட்ட கோரிக்கை

பெரம்பலூர், அக்.31: புறவழிச்சாலை பாலத்தில் ஏற்பட்ட பள்ளங்களை நெடுஞ்சாலைதுறையினர் பஞ்சர் ஒட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் நகருக்கான புறவழிச்சாலை பெரம்ப லூர் துறையூர் சாலையிலிருந்து தொடங்கி, பெரம்பலூர் ஆத்தூர் சாலையின் குறுக்கேசென்று, தண்ணீர் பந்தல் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது. இதன்மூலம் செட்டிக்குளம், துறையூர், ஆத்தூர், அரியலூர் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நகருக்குள் புதுந்து போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தாதிருக்க இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் எளம்பலூர் கிராமத்திற்கான புறவழிச்சாலை இணையும் இடத்தில் ஓடை மேம்பாலம் கான்கிரீட் திண்டுகளால் கட்டப்பட்டுள்ளது. புறவழிச்சாலை முழுவதும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து இருக்கையில் இந்த கான்கிரீட் மேம்பாலம் மட் டும் அதிசயமாக குண்டும் குளியுமாக நிலவைப்போல் பள்ளம் விழுந்து காணப் படுகிறது. இதில் அதிவேகமாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் முன்சக்கரம் குத்தி வாகனத்தை பல்டியடிக்க செய்து, ஓட்டி வந்தவருக்கு படுகாயங்களை ஏற் படுத்தி விடுகிறது. காப்பாற்ற அருகில் ஆளில்லாவிட்டால் காவுவாங்கவும் தயார் நிலையில்தான் பாலம் பரிதாபமாக உள்ளது. இதனைக் கணக்கிட்டே அங்கு பஞ்சர்ஒட்டும் கடையும் தொடங்கப் பட்டு ள்ளது. இதற்கு ஏதுவாக பாலத்தின் பக்க சுவரிலே யே பஞ்சர் ஒட்டுபவரின் செல் நெம்பர்கள் பல இடங் களில் எழுதி வைக்கப் பட்டு ள்ளது. இது இருசக்கர வா கன ஓட்டிகளைக் காவு வா ங்கும் என்பதால் நெடுஞ்சா லைத்துறையினர் விரை ந்து சாலையிலுள்ள பாலத் திற்கு பஞ்சர்ஒட்ட நடவடிக் கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டு கோள்விடுத்துள்ளனர்.

Tags : motorists ,highway bridge ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...