×

சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கு மக்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், அக். 31: அரியலூர் மாவட்டத்தில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகளை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2016-17ம் ஆண்டு 366 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், 2017-18ம் ஆண்டில் 350 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 35 லட்சம் மதிப்பிலும், 2018-19ம் ஆண்டில் 156 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தமாக 872 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. 2019-20 நடப்பாண்டில் 361 பயனாளிகளுக்கு வீட்டு கட்டித்தர அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பசுமை வீடு கட்ட விரும்புவோர் குடும்ப அட்டை நகல், 300 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்துக்கான பட்டா நகல், ஆதார் நகல் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : greenhouses ,
× RELATED பெரம்பலூர் பகுதியில் பலத்த மழைஇடி தாக்கி 2 பசுமாடுகள் பலி