×

பெரம்பலூர் மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு இன்று ஏலம் கட்சியினர் கடும் போட்டி

பெரம்பலூர்,அக்.31: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 31 கல் குவாரிகளுக்கு பெரம் பலூரில் இன்று(31ம்தேதி) ஏலம். அதிமுக, திமுகவுக் குப் போட்டியாக விசிக கட் சியினரும் விண்ணப்பித்ததால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்ட அளவில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கட்டுப்பாட்டில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் கல்பாடி, நாட்டார்மங்கலம், வெங்கலம், வேலூர், கீழக்கரை, அழங்கிலி, புது நடுவலூர், எளம்பலூர், செங்குணம் உள்பட 31 குவாரிகளுக்கு இன்று (31ம்தேதி) ஏலம் நடக்கிறது. 2019-2024வரையென 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளதால் நேற்று அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சியினரும், ஒப்பந்தக்காரர்களும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2வது தளத்திலுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் விண்ணங்க ளைக் கோரி வைக்கப்பட் டிருந்த பெட்டியில் தங்களது விண்ணப்பத்தை அளிக்க வந்தனர். அப்போது இவர்களுக்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வந்து விண் ணப்பங்களை அளிக்க முற்பட்டனர்.

ஆளுங்கட்சியினர் வரும் போது அசையாமல் உட்கார்ந்திருந்த போலீஸ் ஒருவர் பொது நிலையினரும் விடு தலைச் சிறுத்தை கட்சியி னரும் வரும்போது, இருங் கள் அனுமதி கேட்டுவிட்டு வருகிறேன் எனக்கூறி தடு த்ததால் போலீசாருடன் வாக்குவாதங்கள் ஏற்பட் டது. இதனால் நேற்று நாள்முழுக்க அரசியல் கட்சிப்பிர முகர்கள் வருகை யால் கலெக்டர்அலுவலகம் பரப ரப்பாகவே காணப்பட் டது. இதனைத்தொடர்ந்து கலெ க்டர் அலுவலகத்திலுள்ள பொநதுமக்கள் குறைதீர்க் கும் கூட்ட மன்றத்தில் இன்று (31ம்தேதி) 31 கல்குவாரிகளுக்கு ஏலம் நடக்கிறது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் ஏலம் நடக்கிறது. ஆர்டிஓ சுப்பையா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்து ணை ஆட்சியர் சக்திவேல், கலெக்டரின் நேர்முக உத வியாளர்(பொ) ராஜராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மகாலிங்கம், கலெக் டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முனியப்பன், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஜோதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு கல்குவாரியும் குறைந்தபட்சம் ரூ.60லட்சம் முதல் அதிகப்பட்சம் ரூ.1 கோடி வரை ஏலம் எடுக்கப் படுமென எதிர்பார்க்கப் படுகிறது. இதன்படி 31 கல் குவாரிகளும் ரூ.20கோடி க்கு மேல் ஏலம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப் படுகிறது.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி