சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி செவலூரில் செயல்விளக்கம்

திருச்சி, அக்.31: செவலூர் கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மணப்பாறை அருகே செவலூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம் 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குநர் முருகன் தலைமை வகித்தார். எக்டருக்கு 12 எண் இனக்கவர்ச்சி பொறி வயலில் வைக்கவேண்டும். இனக்கவர்ச்சி பொறி வைப்பதால் ஆண் அந்துப்பூச்சி கவர்ந்து இழுக்கப்பட்டு அழிக்கப்படும். இதனால், படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். வேளாண் அலுவலர் கலையரசன், உதவி வேளாண் அலுவலர் திவ்வியமேரி உள்பட பலர் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவிவர்மா, சபரிச்செல்வன் செயல் விளக்கம் அளித்தனர்.

Related Stories:

>