×

செங்குன்றாபுரம் மேலகண்மாய் மடை அடைக்காததால் வீணாகும் மழைநீர்

விருதுநகர், அக். 31:விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் மேல கண்மாய் 60 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த கண்மாய்க்கான தண்ணீர் கோபால்சாமி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் கோப்பநாயக்கன்பட்டி வரத்து கால்வாய் வழியாக வருகிறது. நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால் மேல கண்மாய்க்கு தண்ணீர் வரத்து உள்ளது. மேல கண்மாய் நிறைந்தால் கழுங்கு வழியாக செங்குன்றாபுரம் கண்மாய்க்கு தண்ணீர் வந்து நிறையும். தற்போது மேலகண்மாய் மடையை அடைக்காமல் விட்டதால் மழைநீர் வயல்கள் வழியாக ஓடைக்கு செல்கிறது. அங்கிருந்து விருதுநகர் ஆற்றுப்பாலம் வழியாக குல்லூர்சந்தை அணைக்கு வீணாக செல்கிறது. மடை அடைக்காமல் விட்டதால் மேல கண்மாய் பாசனத்தில் உள்ள 80 ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்ட உடனே வீணாக செல்லும் மழைநீர் மேல கண்மாயில் தேங்கும் வகையில் மடையை அடைக்க வேண்டும். செங்குன்றாபுரம் முத்துக்குமார் கூறுகையில், ‘செங்குன்றாபுரம் மேல கண்மாய் மடையை அடைக்காமல் விட்டதால் மழைநீர் வீணாக ஓடையில் செல்கிறது. மடையை அடைத்திருந்தால் மேல கண்மாய் மற்றும் செங்குன்றாபுரம் கண்மாய்கள் நிறைந்து நெல் விவசாயத்திற்கு பயன்படும். மடையை அடைத்து, அருகில் உள்ள உடைப்பினையும் மணல் மூடைகளால் அடைத்து சரி செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயமும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்’ என்றார்.

Tags : Chengundapuram ,
× RELATED விருதுநகர் அருகே செங்குன்றாபுரம்...