×

குருபூஜைக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

திருச்சுழி, அக். 31:திருச்சுழி அருகே தேவர் குருபூஜைக்கு அசுர வேகத்தில் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் படுகாயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் நடைபெறும் 57வது குருபூஜை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து மற்றும் கார்கள் மூலம் காவல்துறை அனுமதியோடு குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிராமத்தில் இருந்து தேவர் குருபூஜைக்காக பசும்பொன் செல்லுவதற்கு சைலோ காரில் 8 பேர் கிளம்பி சென்றனர். காரை மேட்டுபட்டியைச் சேர்ந்த அபிஷேக் ஓட்டி சென்றார். காரை அசுர வேகத்தில் ஓட்டிச் சென்றதால் கத்தாளம்பட்டி கடக்கும்போது கட்டுபாட்டையிழந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மேட்டுபட்டியைச் சேர்ந்த பாண்டி (34),காளீஸ்வரன் (24), புதுப்பட்டியை சேர்ந்த வனராஜா (17), பொன்னுபாண்டி (17), கண்ணன் (25), கருப்பச்சாமி (20), சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அருண் (21) ஆகியோர் படுகாயமடைந்தனர். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Vehicle crashes ,Gurubhuja ,
× RELATED பண்ணாரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரடி பலி