×

திருமங்கலம் யூனியனில் திறந்த ஆழ்துளை கிணறுகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு

திருமங்கலம், அக். 31:திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திறந்தநிலையில் ஆழ்துளை கிணறுகள் உள்ளனவா என கிராமங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளின் நிலைகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருமங்கலம் ஒன்றிய பகுதிகளில் உள்ள 38 ஊராட்சிகளில் திறந்தநிலையில் ஆழ்துளை கிணறுகள் உள்ளனவா என பிடிஓக்கள் உதயகுமார், சூரியகாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கிராமங்களில் திறந்தநிலையில் ஆழ்துளை கிணறுகள் ஏதாவது இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவற்றை மூடநடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தினர்.

Tags : wells ,Thirumangalam Union ,
× RELATED ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுரை