ராஜபாளையத்தில் கண் பரிசோதனை மைய திறப்பு விழா

ராஜபாளையம், அக். 31:ராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனையின் சார்பில் புதிய கண் பரிசோதனை மைய திறப்பு விழா நடந்தது.ராஜபாளையம் நகரில் 18 வருடங்களாக கண் சிகிச்சைக்காக என பிரத்யேக மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் நவீன கண்புரை அறுவை சிகிச்சை, கண்நீர் அழுத்தம், கிளாக்கோமா லேசர் சிகிச்சை போன்ற வசதிகளுடன் இயங்கி வருகிறது. இதில் வாடிக்கையாளர்களின வசதிக்காக கண் பரிசோதனை மையம் பிரத்யேகமாக நகரின் நடுவே சாந்தி தியேட்டர் எதிரே தெற்கே திறக்கப்பட்டுள்ளது.நேற்று காலை டாக்டர் அனிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் பிரமுகர்களை டாக்டர் ராஜேஷ் வரவேற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த கிளையில் கண் பரிசோதனை, சிகிச்சை, மருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சக்தி கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Opening Ceremony of Eye Testing Center ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரத்தில்