×

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயம்

தேனி, அக். 31: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுதாரர்கள் காத்திருக்கும் பகுதியின் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் சுமார் 2 கி.மீ தொலைவில்  பெருந்திட்ட வளாகத்தில் உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதிகளை பதிவு செய்வது, தொழில்கல்விகளை பதிவு செய்வது, தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ், தொழில் நெறி வழிகாட்டும் மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பதிவுதாரர்கள் வந்து செல்கின்றனர்.  வேலைவாய்ப்பு முகாமும் தனியார் நிறுவனங்கள் மூலமாக இவ்வலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்கின்றனர்.

 இவ்வேலைவாய்ப்பு முகனாமில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு. தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இவர்களில் பலர் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் பகுதி உள்ளது. இங்கு பதிவுக்கு வரும் பதிவுதாரர்கள் உட்கார சிமெண்டு இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கை பகுதிக்கு மேற்புறம் உள்ள மேற்கூரையானது கலர் பிளாஸ்டிக் சீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பிளாஸ்டிக் சீட்டுகள் உருக்குலைந்து போய், கிழிந்து, தொங்கிக் கொண்டிருக்கிறது. காற்று வீசினால் காத்திருக்கும் பகுதியில் பிளாஸ்டிக் சீட்டுகள் கீழே விழுந்து விடும் நிலை உள்ளது. பிளாஸ்டிக் சீட்டுகள் கீழே விழும்போது, கீழ்பகுதியில் பதிவுக்காக காத்திருப்போர் இருந்தால் அவர்கள் மீது சீட் விழுந்து காயம் ஏற்படும் அபாயம உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உருக்குலைந்து போயுள்ள மேற்கூரையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவுதாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : employment office ,Theni ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...