×

கம்பத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு

கம்பம், அக். 31: கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு ரோடு பிரிவில் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கம்பத்தில் உள்ள கம்பமெட்டு ரோடு பிரிவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க காவி நிற சட்டையும், கருப்பு வேஷ்டியும் அணிந்த ஒரு ஆணின் பிணம் கிடப்பதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ வினோத்ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : corpse recovery ,
× RELATED மணிப்பூரில் விறகு சேகரிக்க சென்ற 3...