×

மழையால் மானாவாரி விவசாயிகள் தேவாரத்தில் உற்சாகம்

தேவாரம், அக்.31: தேவாரம் பகுதிகளில் பெய்த மழையினால் மானாவாரி பயிர்களை விதைத்த விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களிலும் மழை கொட்டியது. தேவாரம், தம்மிநாயக்கன்பட்டி, டி.ரெங்கநாதபுரம், பொட்டிப்புரம், டி.மீனாட்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் பெய்த மழையினால் மானாவாரி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். மலையடிவாரத்தை ஒட்டிய இடங்களில் அதிக அளவில் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களும், அவரை, துவரை, மொச்சை உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது. மழையினால் இதற்கு ஊட்டம் கிடைத்துள்ளதாகவும், இச்செடிகள் அதிக அளவில் பூக்கள் பூத்து விளைச்சலை அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் தோட்டத்து கிணறுகள், நீறுற்றுகளில் தண்ணீர் அதிகரிக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர். விவசாயி காளிமுத்து கூறுகையில், ``தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டிய இடங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் மானாவரி பயிர்கள் விவசாயம் நடக்கிறது. மழையினால் இதன் பரப்பு அதிகரிக்கும். விவசாயத்தின் லாபமும் அதிகரிக்கும்’’ என தெரிவித்தார்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?