×

சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு புகார்

சிவகங்கை, அக். 31: சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக திமுக சார்பில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை திமுக நகர் செயலாளர் துரைஆனந்த் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ‘சிவகங்கை நகராட்சியில் கடந்த 2007ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் இதுவரை முடிவடையவில்லை. இத்திட்டத்திற்கும், குடிநீர் இணைப்பிற்கும் தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு ரசீது கொடுப்பதில்லை. நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பிற்கும், குடிநீர் இணைப்பிற்கும் 15 ஆயிரம் இணைப்பு கொடுப்பதற்கு தமிழக அரசு அரசு சார்பில் ரூ.7 கோடியே 60லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கடந்த 10.03.2019 அன்று நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்தது. ஆனால் இந்த நிதி ஒதுக்கீட்டை மறைத்து தற்போது வசூல் நடந்து வருகிறது. இணைப்பிற்கு மக்களிடம் வாங்கப்படும் பணத்திற்கு ரசீது கொடுப்பதில்லை. ஆனால் நகராட்சியில் இணைப்பு கொடுத்ததற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பில் எடுத்து வருகின்றனர். இந்த முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga Municipality ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் ரூ.95 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்