×

சிவகங்கை மாவட்டத்தில் குளம்,ஊரணி தூர்வாரும் பணி துவக்கம்

சிவகங்கை, அக். 31: சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணித்திட்டத்தின் கீழ் ரூ.38 கோடி மதிப்பீட்டில் 500 குளங்கள் மற்றும் 2ஆயிரத்து 300 ஊரணிகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடந்து வரும் குடிமராமத்துப் பணியை ஆய்வு செய்து கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் 4ஆயிரத்து 464சிறுபாசனக் குளங்கள் மற்றும் 4ஆயிரத்து 325 ஊரணிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 500 சிறுபாசனக் குளங்கள் மற்றும் 2 ஆயிரத்து 300 ஊரணிகள் ரூ.38 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணி மூலம் சீரமைக்க பணி துவக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் திட்டமிட்டப்படி தேர்வு செய்யப்பட்ட ஊரணிகள் மற்றும் குளங்கள் விரைவாக சீரமைக்க பணிகள் நடந்து வருகின்றது. பொதுமக்கள் பங்களிப்புடன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய்களை தூர்வாரி, மடை, கழுங்கு மற்றும் படித்துறை முதலிய கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடித்தவுடன் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள குளங்கள், ஊரணிகள் மதிப்பீடு பெற்று அதனுடைய பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், பொறியாளர் முருகன், கண்காணிப்பு அலுவலர் பூங்குழலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pond ,Sivaganga District ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...