×

சிறப்பு சக்கர நாற்காலி பெற நவ.6ல் நேர்முகத்தேர்வு

சிவகங்கை, அக். 31: தசைச் சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெற சிவகங்கையில் நவ.6ல் நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தசைச் சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பாட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயலிழந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பணிபுரிபவர்களுக்கும் மற்றும் சுயதொழில் புரிபவர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்.  சிறப்பு சக்கர நாற்காலிகள் 10 சதவீகிதம் மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களான 60 வயதிற்கு உட்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55வயதிற்கு உட்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும். இந்த நாற்காலிகள் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். எனவே, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் தேவைப்படும், மாற்றுத்திறனுடைய நபர்கள் போட்டோ மற்றும் தாங்களின் முழு விவரங்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உய சான்றுகளுடன் 6.11.2019 அன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்