பசும்பொன்னில் தேவர் குருபூஜை அரசியல் கட்சியினர்,பொதுமக்கள் மரியாதை

சாயல்குடி, அக்.31:  கமுதி அருகே பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழா, 57ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி, மூன்றாம் நாளான நேற்று முக்கிய தலைவர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து, மொட்டையடித்து, பால்குடம், முளைப்பாரி, காவடி, ஜோதி, அலகு குத்தி, வேல் எடுத்து வந்து செலுத்தினர். கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் 28ம் தேதி காலை ஆன்மீக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும், திருவிளக்கு பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் காலை அரசியல் விழா இரண்டாம் நாள் யாகசாலை பூஜையும், ஆன்மீகசொற்பொழிவு, பஜனை, கூட்டு பிரார்த்தனையுடன் லட்சார்ச்சனை நடந்தது.

நேற்று தேவர் நினைவிடத்தில் நடந்த குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையொட்டி தேவர் நினைவிடத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகரன், முதுகுளத்தூர் நில வங்கி தலைவர் ஆர்.தர்மர், அதிமுக மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். திமுக முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்(மண்டபம் மேற்கு) பிரவின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலா பேரவை மாநில பொதுச்செயலாளர் சாந்தி கார்த்திக்,மாவட்ட செயலாளர் வ.து. ஆனந்த். ஒன்றிய செயலாளர்கள் கடலாடி பத்மநாதன், சாயல்குடி பச்சக்கண்ணு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பூமிநாதன், சிறுபான்மை நல பிரிவு மாவட்ட தலைவர் பைராம்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அதன் தலைவரும், திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கருணாஸ். பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். முன்னதாக  அமைக்கப்பட்ட அன்னதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவங்கி வைத்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.கள் திருநாவுகரசர், மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ மலேசியாபாண்டி, காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>