×

சாலைகளில் வாகன ஓட்டிகளை கவிழ்க்கும் பள்ளங்கள்

மதுரை, அக்.31: மதுரையில் வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் ரோடுகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை நகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக ெதாடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த தொடர் மழை காரணமாக நகர் பகுதியில் உள்ள ரோடுகளில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தண்ணீர் தேங்கி கிடப்பது பள்ளம் எனத் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக செல்லூர், ஜெய்ஹிந்துபுரம், திடீர் நகர், வடக்குமாசி வீதி, நெல்பேட்டை, யானைக்கல், தெற்குவாசல், கீழமாரட் வீதிகள், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கரிமேடு, ெஜயில் ரோடு, காளவாசல், ஏ.ஏ.ரோடு, பொன்னகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பள்ளங்கள் அதிகமாக உள்ளன.

இருசக்கர வாகனங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்பவர்கள் இந்த பள்ளங்களில் சிக்கி படாதபாடு படுகின்றனர். நேற்று மாலை செல்லூர் ரோட்டில், மொபட்டில் மனைவி, குழந்தையுடன் வந்த ஒருவர், அருள்தாஸ்புரம் அருகே ரோட்டிலிருந்த பள்ளத்தில் வண்டியை இறக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மூவரும் காயமடைந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்து, மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று விடிய விடிய பெய்த மழையால், ரோடுகளில் பள்ளங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

மதுரையில் உள்ள நுகர்வோர் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், மதுரையில் தொடர் மழை பெய்துவரும் நிலையில், ரோடுகளில் உள்ள பள்ளங்களால் அதிகளவில் விபத்து ஏற்படுகிறது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என பலர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை ெபறுகின்றனர். தினமும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ரோடுகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : motorists ,roads ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...