×

அரசு மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் கருவியை முதல்வர் திறக்காதது ஏன்? மதுரை வந்தும் திறக்காமல் சென்றார்

மதுரை, அக்.31: புற்றுநோயை துல்லியமாக கண்டறிய உதவும் ‘பெட் சிடி ஸ்கேன்’ மதுரை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னையை அடுத்து மதுரையில்தான் இக்கருவி நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகளவில் புற்றுநோய் பரவி வரும் நிலையில், இக்கருவியை தாமதப்படுத்தாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்ைக வைத்தனர். இதனால் தேவர் ஜெயந்தி விழாவிற்கு மதுரை வரும் தமிழக முதல்வர் இந்த அதிநவீன பெட் சிடி ஸ்கேனை திறந்து வைத்து இயக்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் தகவல் வரலாம் என்று கருதிய மருத்துவமனை நிர்வாகம், பெட் சிடி ஸ்கேனை, முதலமைச்சர் திறந்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதல்வர் பெட் சிடி ஸ்கேனை திறந்து வைக்காமல் சென்னை சென்றுவிட்டார். இதனால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த, டாக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஏமாற்றம் அடைந்தனர். தொடர் மழை மற்றும் சிறுவன் சுஜித் மரணம் போன்ற காரணங்களால் முதல்வர் பெட் சிடி ஸ்கேன் திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

Tags : chief minister ,facility ,opening ,Madurai ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...