×

அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில் குருபெயர்ச்சி விழா

அலங்காநல்லூர், அக்.31: அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பரிகார ராசிக்காரர்களுக்காக அவரவர் பெயர் நட்சத்திரங்களுக்கு பூஜைகள் கும்ப கலசங்கள் வைத்து நடந்தது. தொடர்ந்து தெட்சிணாமூர்த்தி சன்னதியில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர் அங்குள்ள ஐயப்பன் சுவாமிக்கும், உபசன்னதிகளில் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Aruankanallur Iyyappan Temple ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது