×

தேவர் வாழ்ந்த இல்லத்தில் எம்எல்ஏ.க்கள் மரியாதை

திருப்பரங்குன்றம், அக்.31: திருநகரில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் இல்லத்தில் நேற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 112வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருநகரில் முத்துராமலிங்கத்தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் நேற்று பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத்தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சரவணன். ராஜன் செல்லப்பா ஆகியோர் தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Thevar ,residence ,
× RELATED எம்எல்ஏக்கள் வழங்கினர் தொழிலாளர்,...