×

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தி முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம்

உசிலம்பட்டி, அக்.31: உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியையொட்டி ஐந்துகல்ராந்தலில் உள்ள தேவர் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி முன்னாள் எம்எல்ஏ கதிரவன் சார்பில் ஆதிசேடன் தலைமையில், பாஸ்கரபாண்டியன், ஐராஜா ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், சிறுவர், சிறுமியர் சிலம்பாட்டம் ஆடியும் ஊர்வலமாக வந்தனர்.
பாரதிய பார்வட்பிளாக் கட்சியின் முருகன்ஜி சார்பாக சுபாஷ் தலைமையிலும், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், மூவேந்தர் முன்னேற்ற கழகம் சுந்தரசெல்வி, ஒச்சாத்தேவர், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சங்கிலி, மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ரபீக், முக்குலத்தோர் புலிப்படை திரவியம், ஆண்டித்தேவர் புரட்சி பார்வர்ட் பிளாக் முத்துராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகில் தொழிற்சங்கம் சார்பில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துப்பாண்டி, முத்துக்குமார், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பூ மார்க்கெட், ஆட்டோ, கார், தினசரி மார்க்கெட், நலச்சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியகட்டளை, அல்லிகுண்டம், கணவாய்பட்டி, கீரிபட்டி, அன்னம்பாரிபட்டி, மாதரை, குப்பணம்பட்டி, பூச்சிபட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : procession ,Thevar Jayanthi Mulipari ,Palkudam ,Usilampatti ,
× RELATED விஜயகாந்த் குணமடைய தேமுதிகவினர் பால்குட ஊர்வலம்