×

அனைத்துக்கட்சி தலைவர்கள் மாலை அணிவிப்பு மஞ்சள் காமாலை பாதித்த கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

மேலூர், அக்.31: மேலூர் அருகே சிறுவர்களை மட்டும் தாக்கும் மஞ்சள் காமாலை நோய் கிராமம் குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து சுகாதார துறை உயரதிகாரிகள் ஆய்வு
நடத்தினர். மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை மட்டும் குறி வைத்து மஞ்சள் காமாலை நோய் தாக்கி வருவது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த அக்.14ல் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து சுகாதார துறையினர் தும்பைபட்டியில் முகாமிட்டு நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் மங்களாம்பட்டி கிராமத்திலும் சிறுவர்களை மஞ்சள் காமாலை நோய் தாக்கி உள்ளது குறித்து தினகரன் நாளிதழ் சுட்டிக்காட்டி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து சுகாதாரத்துறையின் சர்வேலன்சஸ் ஆபீசர்கள் 2 பேர் தும்பைப்பட்டி மற்றும் மங்களாம்பட்டியில் மஞ்சள் காமாலை தாக்குவதற்காக காரணம் குறித்து ஆய்வு செய்தனர். இவர்களுடன் வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள், சுகாதார மேற்பார்வையாளர் கடற்கரை, மருத்துவ மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ராம்பாபு, மகேஷ்குமார் இருந்தனர்.  மஞ்சள் காமாலை முன்னெச்சரிக்கை தடுப்பு குறித்து மகாத்மா நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ அதிகாரிகள் எடுத்துக் கூறி, அவர்களை அப்பணியில் ஈடுபடுத்தினர். இவர்களுக்கு சுகாதார செவிலியர்கள் உதவினர்.

Tags : party leaders ,villages ,health department officials ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு