×

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பணமும் கொள்ளை வீடுகளில் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

மதுரை, அக்.31: மதுரையில் பூட்டிய வீடுகளில் கதவை உடைத்து 10 பவுன் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  மதுரை கூடல்புதூர் சங்கீதா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் அருண்ராஜா. இவரது மனைவி ராஜேஸ்வரி(41). இவர்கள் குடும்பத்துடன் கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர். மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இதேபோல் ஒத்தக்கடை பாரதிநகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன

Tags :
× RELATED ‘ஜோகோவிச்தான் சிறந்த வீரர்’ - பாட் காஷ் புகழாரம்