×

நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற 7 நாட்கள் கெடு

வத்தலக்குண்டு, அக். 31: நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி 7 நாட்கள் கெடு விதித்துள்ளது. நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் பேரூராட்சி உரிமம் பெற்ற கடையினர் சிலர் செய்துள்ள ஆக்கிரமிப்பாலும், உரிமம் பெறாமல் கட்டிடம், தாழ்வாரம் போட்டுள்ள ஆக்கிரமிப்பாலும் பஸ்கள் உள்ளே வருவது இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் தொடர்ந்து பேரூராட்சிக்கு புகார் செய்தனர். இந்நிலையில் நிலக்கோட்டை பேரூராட்சி ஊர் முழுவதும் தண்டோரா மற்றும் ஆட்டோ ஒலி பெருக்கி மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதாவது நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை 7 நாட்களுக்குள் அகற்றி விட வேண்டும்.

இல்லாவிடில் போலீசார், வருவாய்த்துறையினருடன் வந்து பேரூராட்சியை ஆக்கிரமிப்புகளை அகற்றும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்து செயல்அலுவலர் கோட்டைச்சாமி கூறுகையில், ‘நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பேரூராட்சி அகற்றி ஆக்கிரமிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : removal ,bus stand ,Nilakkottai ,
× RELATED பஸ் ஸ்டாண்டில் மின்கம்பங்கள் அகற்றம்