×

ஒட்டன்சத்திரத்தில் மின்கம்பிகள் சேதமா? இதோ இந்த நம்பருக்கு கூப்பிடுங்க...

ஒட்டன்சத்திரம், அக். 31: ஒட்டன்சத்திரத்தில் மின்கம்பிகள் சேதம் குறித்து தெரிவிக்க செல் எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் மின்சார வாரியம் சார்பாக அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.மின்கம்பத்தின் மீதோ மின்கம்பிகளின் மீதோ மரங்கள் விழுந்ததை அறிந்தாலோ, மின்கம்பங்கள் மழை, காற்று காரணமாக சேதமடைந்ததை அறிந்தாலோ, மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததை அறிந்தாலோ அவற்றின் அருகிலோ அல்லது அவற்றை தொடவோ முயற்சிக்க கூடாது, அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்திடவும், மின் விபத்தினை தடுத்திடவும், மின் சப்ளையை சீரமைத்திடவும் கீழ்கண்ட மின்சார வாரிய அலுவலர்களான உதவி பொறியாளர் நகர் 9445852740, ஒட்டன்சத்திரம் உதவி செயற் பொறியாளர் 9445852735, உதவிப் பொறியாளர் அம்பிளிக்கை 9445852742, உதவி பொறியாளர் விருப்பாட்சி 9445852741 ஆகிய அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளர் (பொ) மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஒட்டன்சத்திரம் பள்ளியில் காலை உணவு திட்டம் ஆய்வு