×

மின்தடையால் பணிகள் பாதிப்பு கன்னிவாடி பத்திர ஆபீஸ் முற்றுகை ஜெனரேட்டர் இருந்தும் இந்த நிலைமையா?

திண்டுக்கல், அக். 31: கன்னிவாடி பேரூராட்சியின் 15 வார்டுகள், கசவனம்பட்டி, தருமத்துப்பட்டி, தெத்துப்பட்டி வருவாய் கிராமங்களுக்கான பத்திரப்பதிவுகள் கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கின்றன. அதிக செயல்பாடு காரணமாக 2017ல் சொந்தமான புதிய கட்டடத்திற்கு மாற்றினர். இங்கு ஜெனரேட்டர் உள்பட பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய ஜெனரேட்டரை பயன்படுத்தாமல், கழிப்பறையில் போட்டு மூடி வைத்துள்ளனர். இதை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மக்கள், பெரும்பாலும் மின்தடை உள்ளதாகக்கூறி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றும் மின்தடை பிரச்னை வந்ததால் ஆவேசமடைந்த மக்கள் கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் தாங்களாகவே கலைந்து சென்றனர். இந்த முற்றுகையால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சார்பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. தற்போது ஜெனரேட்டர் பழுதான நிலையில் உள்ளது. யுபிஎஸ் வசதி செய்து தர, அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு