பொருளாதாரம் இல்லை முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா

பொன்னமராவதி, அக்.31: பொன்னமராவதி அருகே ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றதுபொன்னமராவதி ஒன்றியதிற்குட்பட்ட ஆர் பாலகுறிச்சியில் கடந்த ஆவணி மாதம் 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு முக்கிய நிகழ்வான 48ம் நாள் மண்டலாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு வழிபாடு செய்தனர். இதில் பாலகுறிச்சியை சுற்றியுள்ள ரெகுநாதபட்டி, வைரம்பட்டி, சீகம்பட்டி, வெடத்தளாம்பட்டி, கோபால்பட்டி ஆகிய கிராமப் பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mundumariamman Temple Mandalabhishekha Festival No Economy ,
× RELATED ஆலவயல் ஊராட்சியில் தூய்மைப்பணி தீவிரம்