×

மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

அறந்தாங்கி, அக்.31: அறந்தாங்கி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மையத்தில் உள்ளடங்கிய கல்வி மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி அறந்தாங்கி நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பயிற்சியினை அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் அருள் தலைமையில் நடைபெற்றது . பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

பயிற்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் சிவயோகம் வரவேற்று பேசினார். பயிற்சியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அரசின் உதவித் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அடைந்த முன்னேற்றங்கள் குறித்து எடுத்துக் கூற செய்தல் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்னேற்றம் அடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது.

அறந்தாங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேணுகா நன்றி கூறினார். பயிற்சியின் கருத்தாளர்களாக இயன்முறை மருத்துவர் சரவணன் சிறப்பாசிரியர்கள் செந்தில், சசிகலா, பெரியநாயகி மற்றும் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 30 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Parents ,Transitional Children ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்