×

 அதிகாரிகள் பார்வைப்படுமா? நாற்று நட ெசல்லும் சிறுமி கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா? ஊராட்சி செயலர்கள் ஆய்வு

கந்தர்வகோட்டை, அக்.31: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளிலும் பயன்படுத்தாத ஆழ்குழாய் கிணறுகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என அந்தந்த ஊராட்சி செயலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் வீட்டின் பின்புறம் இருந்த ஆழ்குழாய் கிணற்று ஓட்டையில் விழுந்து சுஜித் என்ற சிறுவன் உயிரிழந்தான். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி, கொத்தகம், உடையார் தெரு , சிவன் கோவில் தெரு மற்றும் தஞ்சை சாலையில் உள்ள உவந்தான் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் குழாய்கள் பாதுகாப்பான முறையில் உள்ளனவா என ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

இதே போல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சரியான முறையில் மூடிகள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூடப்பட்டுள்ளனவா என சரிபார்க்கப்பட்டது. பயன்படுத்தாத ஆழ்க்குழாய் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த பல வருடங்களாக மழையே இல்லாத நிலையால் நிலத்தடி நீர்மட்டம் அதாளபாதாளத்தில் சென்றதால் பல ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாத நிலையில் இருந்தன. தற்போது சமீபத்தில் பெய்த தொடர்ந்து மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்நிலைகளில் அதிகளவில் மழை தண்ணீர் தேங்கியுள்ளன. எனவே ஆழ்குழாய் கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக மழையே இல்லாத நிலையால் நிலத்தடி நீர்மட்டம் அதாளபாதாளத்தில் சென்றதால் பல ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இல்லாத நிலையில் இருந்தன.

Tags : area ,Inspection ,Kandarwagotte Union ,Panchayat Secretaries ,
× RELATED பட்டுக்கோட்டையில் கொரோனா முகாம்...