×

டாக்டர்களுக்கு ஆதரவாக பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் வாய்க்கால்களை தூர்வாராததால் மழைநீரை சேமிக்க முடியவில்லை

பாபநாசம், அக். 31: பாபநாசம் பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாராததால் மழைநீரை சேமித்து வைக்க முடியவில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்று வந்தனர். பாபநாசம் பகுதியில் பெய்த மழையால் கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.சாக்கடை நீரும், மழைநீரும் கலந்ததால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் பாபநாசம் பகுதி சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறி வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை அருகில் உள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதால் எவ்வளவு மழை பெய்தாலும் விளை நிலைங்கள் பாதிக்கப்படாது. பாபநாசம் பகுதியில் ஓடும் வடிகால் வாய்க்கால்களான அன்னுக்குடி வாய்க்கால், திருப்பாலத்துறை வாய்க்காலை தூர்வாரி இருந்தால் மழைநீர் அதில் சேகரமாகியிருக்கும். வாய்க்கால்களை தூர்வாராததால் மழைநீரை சேமிக்க முடியவில்லை என்றனர்.

Tags : Doctors ,Babanasam ,area ,
× RELATED அமெரிக்காவில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி