×

சிரமத்துக்கு ஆளான பள்ளி கல்லூரி மாணவர்கள் பேராவூரணி பகுதி விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

பேராவூரணி, அக். 31: பேராவூரணி பகுதி விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வரும் நவம்பர் 3, 4, 5ம் தேதிகளில் பலத்த மழை பெய்யுமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே இதுவரை சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் உடனடியாக பொது இ சேவை மையங்களிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ உடனே பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள். ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ரூ.465 செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
பயிர் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.31,000 கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
கனமழையினபோது பயிர் இழப்பு ஏற்பட்டால் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற முடியும். எனவே பயிர் காப்பீடு செய்து கொள்ள நவம்பர் மாதம் இறுதி கடைசி தேதி வரை காத்திராமல் உடனே காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : school college students ,Peravurani ,Samba ,area farmers ,
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு