மேட்டுப்பட்டியில் மனு நீதி முகாம் நிறைவு நாள் விழா

கடவூர், அக்.31: ஆதனூர் ஊராட்சி மேட்டுப்பட்டியில் மனு நீதி முகாம் நிறைவு நாள் விழா நடந்தது.முகாமிற்கு சப். கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமான் தலைமை வகித்தார். ஆதி திராவிட நல அலுவலர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ் வரவேற்றார். முகாமில் 195 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்தி 92 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் கால்நடை துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், மண்டல இயக்குநர் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவர் பிச்சை முத்து, தனி தாசில்தார் புகழேந்தி, நில வரி திட்ட அலுவலர் கலியமூர்த்தி, துணை தாசில்தார் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் மைதிலி நன்றி கூறினார்.

Tags : Closing Ceremony of Petitioner Justice Camp ,
× RELATED கல்வியை காவிமயமாக்க மத்திய பாஜ அரசு திட்டம்