×

மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

கரூர், அக். 31: தொடர்ந்து மழைபெய்துவருவதால் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீர்செய்யவேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 652மிமீ. அக்டோபர் மாதம்வரை பெய்யவேண்டிய மழை 493.70மிமீக்கு இதுவரை சுமார் 400மிமீ மழைபெய்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து கொண்டிருக்கிறது.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றினை புனரமைத்தும் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இப்பணிகள்இன்னமும் முழுமையபெறவில்லை. பருவமழை காலங்களிலும், வெப்ப சலனங்களினாலும் பெறப்படும் மழை நீரினை வீணடிக்காமல் உரிய முறையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி சேமித்திடும் பட்சத்தில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறையினை சரி செய்யலாம்.

எனவே அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை தவறாமல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டிடங்களில் அரசுகட்டடங்களில் அவை பழுதடைந்துள்ளது. அவ்வாறு இருக்கும் அமைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதன்வாயிலாக கரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தினை உயரும். மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உடினடியாக அமைத்து தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் பெறப்படும் மழைநீரினை சேமிக்க அதிகாரிகள் துரித நடவடிககை எடுக்கவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு