அமராவதி ஆற்றில் தனியார் தண்ணீர் எடுப்பதை முறைப்படுத்த கோரிக்கை

கரூர், அக்.31: அமராவதி ஆற்றில் தனியார் தண்ணீர் எடுப்பதை முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து அமராவதி அணை உள்ளது. அமராவதி அணை கடந்த ஆண்டு ஜுன் மாதம் பருவ மழை காரணமாக நிரம்பியது. 8ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது, பின்னர் பாசனத்திற்காக செப்டம்மாதம் நீர் திறக்கப்பட்டது. 2மாதமாக நிரம்பியிருந்தஅணை நீர் படிப்படிப்பாக குறைந்தது. இந்த ஆண்டுகாவிரியிலும் நீர் திறக்கப்படவில்லை. இருமுறை தண்ணீர் திறந்தும் கரூர் மாவட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். மழையில்லாததால்அமராவதி ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 47ஆயிரம் எக்கர் நிலம் பாசனத்திற்காக அமராவதி நீரைநம்பி உள்ளது.

இதுதவிர கரூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் உள்ள ஊராட்சிகள், கரூர் நகராட்சி எனஉள்ளாட்சி மன்ற நிர்வாகங்கள் அமராவதி ஆற்றில் குடிநீர் கிணறு அமைத்துள்ளன. இந்த கிணறுகளில் இருந்து மேல்நிலைத் தொட்டிகள், தரைமட்டத்தொட்டிகளில் நீர்சேகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.இந்த சூழலில் ஆற்றில் தண்ணீரை தனியார் எடுக்கின்றனர். சிலர் கிணறுகளைஅமைத்தும் நீரை உறிஞ்சுகின்றனர். எனவே அதிகாரிகள் நிலத்தடிநீரை பாதுகாத்து கிணறுகளுக்கு நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும். பொது குடிநீர் விநியோகத்திற்கு பூர்த்தியான பின்னரே தனியார் தண்ணீர் எடுப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Amaravati River ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு