×

மெய்யனூர் பகுதி திமுக செயலாளர் இல்ல திருமணம்

சேலம், அக்.31: சேலம் மெய்யனூர் பகுதி திமுக செயலாளரும், சூரமங்கலம் மண்டல குழு முன்னாள் தலைவருமான சக்கரை சரவணனின் இல்ல திருமணம் சேலத்தில் நாளை நடக்கிறது. சேலம் மத்திய மாவட்ட மெய்யனூர் பகுதி திமுக செயலாளரும், சூரமங்கலம் மண்டல குழு முன்னாள் தலைவருமான சக்கரை சரவணன்- சுஜாதா ஆகியோரது மகள் சவுந்தர்யாவுக்கும், பனங்காடு ஆண்டிப்பட்டி ஈஸ்வரன்- புனிதா ஆகியோரது மகன் சதீசுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் நாளை(1ம்தேதி) காலை 6 மணியில் இருந்து  7 மணிக்குள், சேலம் இரும்பாலை மெயின்ரோடு எம்.எஸ்.வி.திருமண மஹாலில் நடக்கிறது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் தலைமை தாங்கி,  திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். முன்னதாக இன்று(31ம்தேதி) இரவு 7 மணிக்கு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதைத் தொடர்ந்து இன்னிசையும், விருந்து நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் செய்து வருகின்றனர்.

Tags : Mariyanur Area ,DMK ,
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா