×

மாவட்டத்தில் பரவலாக மழை

சேலம், அக்.31:வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென், வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம், நேற்றும் பெய்த மழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மலைப்பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கிணறு, போர் வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: காடையாம்பட்டி 46, ஏற்காடு 43, கரியகோவில் 38, வாழப்பாடி 30, மேட்டூர் 24.4, பெத்தநாயக்கன்பாளையம் 24, ஆத்தூர் 23.4, ஆணைமடுவு 20, ஓமலூர் 19.3, கெங்கவல்லி 17.4, சேலம் 14.5, வீரகனூர் 14, தம்மம்பட்டி 13, சங்ககிரி 10, எடப்பாடி 8 என மழை பதிவாகியுள்ளது.

Tags : rainfall ,district ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...