3,545 டன் காய்கறி, ஜவுளி உள்ளிட்டவற்றை பார்சல் மூலம் அனுப்பியதில் ரயில்வேக்கு 1.36கோடி வருவாய்

சேலம், அக்.31:சேலம் கோட்டத்தில் இருந்து 3,545 டன் காய்கறி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு  பொருட்கள் அனுப்பியதில்,  1.36 கோடி ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் என 140க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் கோட்டத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களில், பார்சல் பதிவு சேவை நடந்து வருகிறது.  வாடிக்கையாளர்கள், 100கிலோ முதல் பொருட்களை அனுப்புலாம். சேலம் கோட்டத்தில்  உள்ள ரயில் நிலையங்களில் இருந்து காட்டன், காய்கறிகள், கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறன. கடந்த மாதம், சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட  ஈரோடு ரயில் நிலையத்தில் காய்கறிகள், ஜவுளி,  கோவையில் இருந்து  காய்கறிகள், ஜவுளி, கரூரில் இருந்து கொசுவலை  என மொத்தம் 3,545டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சேலம், நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய உரம் சிமெண்ட், கோதுமை ஆகியவை தனியார் நிறுவன குடோன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,  ‘சேலம் கோட்டத்தில் இருந்து கடந்த மாதம்  3,545 டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் 1.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ரயில்களில் பார்சல்களை அனுப்பினால், விரைவான நேரத்தில், பார்சல்கள் டெலிவரி செய்யப்படும்,’ என்றனர்.  

Related Stories:

>