தொழிலாளியை கத்தியால் குத்திய முதியவர் கைது

சேலம், அக்.31:கொண்டலாம்பட்டி அருகேயுள்ள தானங்கரடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36), கூலித்தொழிலாளி. இவருக்கு, அதேபகுதியை சேர்ந்த ராஜூ (65) என்பவருடன் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம், சுரேசிடம் தகராறு செய்த ராஜூ, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த சுரேசை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், கத்தியால் குத்திவிட்டு தப்பிய முதியவர் ராஜூவை (65), நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED அண்ணனை மண்வெட்டியால் தாக்கிய தம்பி கைது