×

கருவேப்பம்பட்டி பிரிவில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு

திருச்செங்கோடு, அக்.31:  கருவேப்பம்பட்டி பிரிவில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுகிறது. இதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு- சங்ககிரி செல்லும் பிரதான சாலையில் கருவேப்பம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை பிரிகிறது. இச்சாலை வழியாக ஏராளமான கடைகள் பட்டறைகள்,  குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இறைச்சி கழிவுகள், உபயோகப்படாத பிளாஸ்டிக் பொருட்கள் இங்கு போட்டு செல்கின்றனர். இந்த குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால், தற்போது பெய்யும் மழையில் நனைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுகிறது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை, உடனடியாக ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்