×

நாமக்கல், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

நாமக்கல், அக்.31:  நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே சேந்தமங்கலம், ராசிபுரம், வெண்ணந்தூர், கொல்லிமலை, திருச்செங்கோடு என அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது பருவமழையின் தாக்கத்தால் கொல்லிமலை அடிவார பகுதிகள் மற்றும் அனைத்து பகுதிகளில்  நெல், கரும்பு, சோளம், சாமை, ராகி மற்றும் பருத்தி, மரவள்ளிக்கிழங்கு என பல்வேறு பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராசிபுரம்: ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. நேற்று ராசிபுரம், பட்டணம், புதுப்பாளையம், நாமகிரிபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், ஏரிகள், விவசாய  கிணறுகள் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் உழவு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

Tags : area ,Rajipuram ,Namakkal ,
× RELATED வாட்டி வதைக்கும்...