×

வெண்ணந்தூர் அருகே சிறப்பு மருத்துவ முகாமில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

ராசிபுரம், அக்.31: வெண்ணந்தூர் அருகே, 30க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பாரகொட்டாய் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த ஒரு வாரமாக சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதணனிடையே, அரசு மருத்துவர்கள் போராட்டத்தால், மருத்துவமனைக்கு சென்றால், சிகிச்சை பெற்று வர அதிக நேரமாகிறது. காய்ச்சல் பாதித்தவர்கள் நடக்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்த தகவலின் பேரில்,நேற்று வெண்ணந்தூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர், காய்ச்சல் பாதித்த பாரகொட்டாய் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தினர். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வீடுகளில் சுத்தமான தண்ணீரை வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கி கொசு மற்றும் புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்து, பழைய தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

Tags : Vennandur ,Special Medical Camp ,
× RELATED குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்