×

குப்பை தொட்டியை அகற்றவில்லையெனில் மாநகராட்சி வளாகத்தில் குப்பை கொட்டும் போராட்டம்

திருப்பூர், அக். 31: திருப்பூர்  மாநகராட்சி சந்திராபுரம் பகுதியில் குறுகிய ரோட்டில் குப்பை தொட்டி  வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட  சந்திராபுரம் பகுதியில் 5  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். சிறு, குறு பின்னலாடை,  ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. இரு சக்கர வாகனங்கள், சரக்கு  வாகனங்கள் செல்லும் ரோட்டில் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் குப்பை  தொட்டி வைத்து குப்பைகளை சேகரித்து வருகின்றனர். குறுகிய ரோட்டில் குப்பை தொட்டி   வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. குப்பை  தொட்டிகளை மாற்று இடத்தில் வைக்க அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி  சுகாதாரப்பிரிவு அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இது வரை எந்த   நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொது மக்கள் ேநற்று  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ  இடத்திற்கு வராததால் பொது மக்கள் விரக்தியடைந்தனர். மேலும் திங்கட்கிழமைக்குள் குப்பைத்தொட்டியை அகற்றவில்லையெனில் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் குப்பை கொட்டும் போராட்டம் நடத்தப்போவதாக  அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Tags : garbage bin ,corporation premises ,
× RELATED பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில்...