×

திருப்பூர் அருகே பயன்படாத ஆழ்துளை கிணற்றை மூடிய பொதுமக்கள்

திருப்பூர், அக். 31:திருப்பூரை அடுத்த பட்டம்பாளையத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் நேற்று மூடினர். திருச்சி  அருகே மணப்பாறை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது  குழந்தை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை  மூடக்கோரி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி பெருமாநல்லூரை  அடுத்த பட்டம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள பயன்படாத ஆழ்துளை  கிணற்றை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால்  ஊராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி  பொதுமக்கள் ஒன்றுகூடி நேற்று அந்த ஆழ்துளை கிணற்றை மூடினர். இதேபோல்  பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம், பொடாரம்பாளையம் போன்ற  பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

உடுமலை, :  உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளிலும் மின் மோட்டார் வைத்து இயக்கப்படும் 375 ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. 175 கைப்பம்புகளும் உள்ளன. இதில் பயன்பாட்டில் இல்லாத 30 ஆழ்துளை கிணறுகள் ஏற்கனவே மூடி வைக்கப்பட்டுள்ளன. சிறுவன் சுஜித் மரணத்தை தொடர்ந்து, தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் மூடி போடப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சுப்பிரமணியம் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில் அமராவதி நகர் அருகே ஒரு ஆழ்துளை கிணறை கண்டறிந்து மூடி போட்டனர்.

இதேபோல, மடத்துக்குளம் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், ஆணையர் சிவகுருநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சதீஷ்குமார் ஆகியோர் சோதனை செய்தனர். கடத்தூர், ஜோத்தம்பட்டி, வேடப்பட்டி, காரத்தொழுவு, மைவாடி, பாப்பான்குளம், கொழுமம், சோழமாதேவி, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல், மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியிலும் செயல் அலுவலர் ருக்மணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags : Civilians ,Tirupur ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை