×

பயன்பாடின்றி இருந்த ஆழ்துளை கிணறுகள் மூடல்

பாலக்கோடு, அக்.31: பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளியில் பயன்பாடின்றி திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள், தினகரன் செய்தி எதிரொலியாக மூடப்பட்டன. பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி 1வது வார்டு, கௌனூரில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் அருகில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன், ஆழ்துளை கிணற்றில் இருந்து செல்லும் குழாய்கள் உடைந்து, திறந்த நிலையில் இருந்தது. இதனால் விபத்து அபாயம் நிலவி வந்தது. இந்த ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், நேற்று  கௌனூரில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றை மூடினர். மேலும், மாரண்டஅள்ளியில் உள்ள 15வார்டுகளிலும் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, பயன்பாடின்றி திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளையும் மூடும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Closure ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...