×

வெளி மாநிலங்களில் கனமழையால் ஓசூர் தக்காளிக்கு கர்நாடகாவில் கிராக்கி விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர், அக்.31: கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், ஓசூர் தக்காளிகள் அம்மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், விலையேற்றம் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையால், திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில்கள் மூலமாக காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், ஓசூர்
பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா, கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கு காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஓசூரில் விளையும் தக்காளியை வியாபாரிகள் அதிகளவில் அனுப்பி வருகின்றனர். இதையடுத்து, தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 25 கிலோ எடை கொண்ட தக்காளி 500க்கும், பெங்களூரு தக்காளி 450க்கும் விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். மேலும், தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : states ,Karnataka ,
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...